சென்னை: நடந்து முடிந்த மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பாஜ பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றது. முதல்வராக பிரேன் சிங், 2வது முறையாக இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், டிவிட்டர் பதிவில் பிரேன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் விவரம்: மணிப்பூர் மாநில முதல்வராக 2வது முறையாக பொறுப்பேற்று கொண்டுள்ள பிரேன் சிங்குக்கு எனது வாழ்த்துகள். ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமையவும், அவரது அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துகள்.