×

ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர்..தற்போது அமெரிக்காவில் வாடகை கார் ஓட்டுநர்!: தாலிபான் ஆட்சியால் நிலைகுலைந்த வாழ்க்கை..!!

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் தற்போது அமெரிக்காவில் வாடகை கார் ஓட்டுநராக மாறியுள்ளார். தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றும் முன்னர் அந்நாட்டின் நிதியமைச்சராக இருந்த காலித் பயெண்டா, தற்போது அமெரிக்காவின் வாஷிங்க்டனில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். 600 கோடி ரூபாய் அளவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்து வந்த அவர், தற்போது வாடகை கார் ஓட்டுநராக அங்கு பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவின் படை ஆப்கனில் இருந்து விலகியதை அங்கிருந்த தாலிபான்கள் அரசு கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றினர்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நிதியமைச்சர் பதவியை காலித் ராஜினாமா செய்தார். மேலும் அவருக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆப்கனில் இருந்து குடும்பத்துடன் அமெரிக்கா தப்பிச் சென்று குடியேறினார். தனது குடும்பத்தை காப்பாற்ற தற்பொது ஊபர் டாக்சி ஓட்டுநராக பணிபுரிகிறார். அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த காலித் பயெண்டா, “ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் டாக்சி ஓட்டுகிறேன். 150 டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கிறேன்” என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு அமெரிக்காவை குற்றம் சாட்டுவதாகவும் அவர் கூறினார். ஏனெனில் அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதால்தான் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர் என அவர் தெரிவித்தார். 20 ஆண்டுகள் தாங்கள் அமெரிக்கா அளித்த நம்பிக்கையில் ஆட்சி செய்ததாகவும் ஆனால் அது அட்டைகளின் மீது கட்டப்பட்ட வீடு போல ஒரே நாளில் சரிந்துவிட்டது எனவும் வேதனையுடன் தெரிவித்தார்.

Tags : Former Finance Minister ,Afghanistan ,United States ,Taliban , Afghanistan, Minister of Finance, taxi driver
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து