×

உலகில் காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம்: மாசு தொழில்நுட்ப நிறுவனம் தகவல்

டெல்லி: காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பு வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின் படி, காற்றில் உள்ள துகள்களின் சராசரி 1 மீட்டர் கனசதுரத்திற்கு5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பால் காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது எந்த ஒரு நாட்டிலும் பதிவாகவில்லை.
இதுகுறித்து உலகம் முழுவதும் சுமார் 6,475 நகரங்களில் மாசு தரவுகளின் கணக்கெடுப்பை, சுவிட்சர்லாந்து நாட்டின் மாசு தொழில்நுட்ப நிறுவனம் நடத்தியது.

ஆய்வின்படி உலகில் காற்றுமாசு அதிகம் உள்ள நாடாக பங்களாதேஷும், காற்றுமாசு அதிகம் உள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லியும் முதல் இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி 2021-ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த மாசு அளவு மேலும் மோசமடைந்ததுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விட 93 நகரங்களில் 10 மடங்கு அதிக மாசுபாடு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.      


Tags : Delhi ,Pollution Technology Institute , Air Pollution, Capital, List, Delhi, Pollution Technology Institute
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு