×

முதல்வருடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை:  நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியை சார்ந்த புதிய நிர்வாகிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியை சார்ந்த தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன், மனோபாலா, கோவை சரளா, நடிகை லதா உள்ளிட்ட வெற்றிபெற்ற நிர்வாகிகள் முதல்வரை தலைமை செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது:
நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் புதியதாக பொறுப்பேற்று இருக்கும் ,  மிகப்பெரிய வெற்றியோடு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறோம். நடிகர் சங்க தேர்தல் வரலாற்றை பற்றி முதல்வர் எங்களிடம் கேட்டார். அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் செய்து தர முடியுமோ, அதை செய்து தருவதாகவும் தெரிவித்தார். தேர்தல் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பை தந்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தோம். மேலும், பாதியில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் நடிகர் சங்க கட்டிடத்தை முடிப்பதே எங்களுடைய கோரிக்கையாக முன்வைத்தோம்.


Tags : Actor Association , Meeting with the Chief, Actors Guild Administrator
× RELATED மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர்...