×

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸி.

வெலிங்டன்:நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று நடந்த 21வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க-ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் லாரா வால்வோரட் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அவர் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் சுனே லுஸ் 52 ரன்கள் குவித்தார். இறுதியில் அந்த அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரேச்சல் (17), ஹீலே (5) ரன்னில் அவுட்டாகினர். பின்னர் வந்த கேப்டன் மெக் லேனிங் இறுதிவரை அவுட் ஆகாமல் 130 ரன் எடுத்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 45.5 ஓவரில் 272 ரன் எடுத்து வெற்றிபெற்றது.

Tags : South Africa ,Women's Cricket World Cup , Women's World Cup, South Africa, Aussie.
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...