×

தீபக் சாஹர் இல்லாத குறையை போக்குவார் சிஎஸ்கே.வுக்கு கிடைத்த வேகப்புயல் மில்னே!: பயிற்சியில் அசுர வேகம்

மும்பை: 2022 ஐபிஎல் போட்டிகள் வரும் 26ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் சூரத் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அந்த அணி இன்னும் ப்ளேயிங் 11- ஐ தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. காயம் காரணமாக முதல் பாதி ஆட்டங்களில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இடம்பெற முடியாத நிலை. ஷர்துல் தாக்கூரும் அணியில் இல்லை. இதனால் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

இந்நிலையில் தீபக் சாஹருக்கு மாற்றாக நியூசிலாந்து பவுலர் ஆடம் மில்னேவை தயார்படுத்த சி.எஸ்.கே. முடிவெடுத்தது. பயிற்சியின்போது முதல் சில நாட்கள் மில்னே குறைவான வேகத்தில் பந்து வீசியது கேப்டன் டோனிக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பயிற்சி போட்டியில் மில்னே மின்னல் வேகம் எடுத்துள்ளார். ஒவ்வொரு பந்தையும் 145 + கிமீ வேகத்தில் வீசினார். இது பயிற்சியாளர் பாலாஜியை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. மேலும் வலைப்பயிற்சிகளில் பவுன்சர், யார்க்கர், ஸ்லோ பால் என அனைத்து பந்துகளையும் வீசி அசத்தியுள்ளார். இதனால், தீபக் சாஹருக்கு மாற்றாக நிச்சயம் ஆடம் மில்னே இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. அவருடன் சேர்ந்து ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் கொண்ட ஒரு வேகப்பந்துவீச்சு படையை சிஎஸ்கே உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் ப்ளேயிங் 11 ஐ பொறுத்தவரையில் கான்வே, ருதுராஜ் கெயிக்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, டோனி, பிராவோ, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஆடம் மில்னே, ஷிவம் துபே என சமநிலையான அணி உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Tags : Deepak Sahar ,Milne , Deepak Sahar, grievance, will depart, Milne
× RELATED தீபக் சாஹர் இல்லாத குறையை போக்குவார்...