ஆற்காடு அருகே ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவிடும் பணி-கலெக்டர் உத்தரவால் வருவாய் துறை அதிரடி

ஆற்காடு :  ஆற்காடு அடுத்த புதுப்பாடி உள்வட்டம்  மேச்சேரியில் உள்ள ஏரி கால்வாய் பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த  உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் வில்வன் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியனிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பெயரில் ஏரி கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் ஆய்வாளர் வினோத் தலைமையில் விஏஓ கஜேந்திரன் மற்றும் வருவாய் துறையினர் அளவிடும் பணியை செய்து வருகின்றனர். மேற்கண்ட பணிகளை மண்டல துணை வட்டாட்சியர் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அளவிடும் பணிகள் முடிந்த பிறகு ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: