×

வாணியம்பாடி அருகே புதையல் ஆசைவார்த்தை கூறி ₹56 லட்சம் மோசடி-போலீசில் பெண் புகார்

வாணியம்பாடி :  ₹31 கோடி பணம், 150 சவரன் தங்க நகைகள் புதையல் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி ₹56 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.திருப்பத்தூர் மாவட்டம்,  வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் நவமணி. இவர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த 3 பேர்  நவமணியிடம்  நண்பர்களாக பழகி ₹31 கோடி பணம் மற்றும்  150 சவரன் தங்க நகைகள் புதையல் இருப்பதாக கூறியும், பணம் செலவு செய்தால் அதனை எடுக்க முடியும் என கூறி கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை நவமணியிடம் ₹3000த்தில் இருந்து தொடங்கி சுமார் ₹56 லட்சம் வரை அவ்வப்போது பல தவணைகளில்  வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இது சம்பந்தமாக நவமணி பணம் கொடுத்து ஏமாந்த பெண்ணிடம் பலமுறை புதையல் குறித்து கேட்டபோது  நீதிபதி, வழக்கறிஞர்கள் போன்று தொலைபேசியில் பேசி பதில் அளித்து வந்தாராம். இதனால்  சந்தேகமடைந்த நவமணி சம்பவம் குறித்து காவல் துறை தலைவர்,  வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்துக்கு இணையவழி மூலம்  புகார் அளித்துள்ளார்.
புகாரின்  பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Vaniyambadi , Vaniyambadi: ₹ 31 crore in cash, ச 150 lakh in gold jewelery hoarding
× RELATED போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு...