×

புத்தூர் அடுத்த மிட்டபல்லூறுவில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

சித்தூர் : புத்தூர் அடுத்த மிட்டபல்லூறுவில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சித்தூர் கலெக்டர் ஆபிசில் கிராமமக்கள் அனு அளித்துள்ளனர்.
சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் முருகன் ஹரிநாராயணன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் வழங்கினர். இதில், மொத்தம் 227 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை இணை கலெக்டர்கள் ராஜசேகர் மற்றும் தர் ஆகியோர் பெற்று கொண்டனர்.

இந்நிலையில், புத்தூர் அடுத்த மிட்டபல்லூறு கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலை வசதி அமைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கலெக்டரிடம் கோரிக்கை  மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது:எங்கள் கிராமத்தில் உள்ள 150 வீடுகளில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆனால், கிராமத்திற்கு சாலை வசதியின்றி பெரும் அவதிப்பட்டு வருகிறோம். பலமுறை மண்டல வருவாய்த்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்பட்டால் போக்குவரத்து வசதியின்றி பெரும் அவதிப்பட்டு வருகிறோம்.

மேலும், எங்கள் கிராமத்திற்கு ஆட்டோக்களும் வருவதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலை வசதி இருந்தால் எங்கள் கிராமத்திற்கு ஆட்டோக்கள் வர நன்றாக இருக்கும். ஆனால், எங்கள் கிராமத்திற்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் ஆட்டோக்கள் வர ஓட்டுனர்கள் அச்சப்படுகின்றனர். கர்ப்பிணி, குழந்தை மற்றும் முதியோர்களுக்கு ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் டோலி கட்டி சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கலெக்டர் உடனே உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல், போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். எங்கள் கோரிக்கைகளை கலெக்டர் உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Puthur ,Mittaballuru-Public ,Collector's Office , Chittoor: The villagers have informed the Chittoor Collector's Office that a transport facility should be set up at Mittapalluru next to Puttur.
× RELATED அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு