×

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெளிமாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு-நேற்று வரை 33 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டது

வேலூர் : வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கான வெளிமாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வில் நேற்று வரை 33 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டது.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 14ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் பணி நிரவல், மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் என விருப்பம் கேட்டு 337 பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கான கலந்தாய்வு காட்பாடி காந்தி நகர் எஸ்எஸ்ஏ திட்ட அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடந்தது. இதில் 18 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. 15ம் தேதி மாவட்டத்துக்குள் பணியிட மாறுதலுக்கான நடந்த கலந்தாய்வில் 139 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது.தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் என வெளிமாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் கேட்டு 102 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இக்கலந்தாய்வு கடந்த வாரமே முடியவிருந்த நிலையில், எமிஸ் இணையதளத்தில் ஆசிரியர்களின் தகவல்களை பதிவு செய்வது மற்றும் அவற்றை பார்ப்பதில், ஏராளமான தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டன.

இதையடுத்து, தனித்தனியே தினமும் காலியிடங்களை பதிவு செய்து, அந்த பட்டியலின்படி, இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 7வது நாளாக கலந்தாய்வு நடந்தது. இதுவரை 33 பேர் வெளிமாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் ஆணையை பெற்றனர். இக்கலந்தாய்வு தொடர்ந்து மூன்று நாட்களில் முடிய வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags : Velore ,Ranipeta ,Thirupathur , Vellore: Change of workplace for outstation teachers in Vellore, Ranipettai and Tirupati districts.
× RELATED சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்...