
டெல்லி: முல்லை பெரியாறு அணை உறுதியாக இல்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது. அணை ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என கேரள அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திரமான ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.