×

எங்களை ஏற்கிறோம் அல்லது ரஷ்யாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ உடனே கூற வேண்டும் : உக்ரைன் அதிபர் பேட்டி

கீவ் : நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம், தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி உள்ளிட்ட நகரங்களில் 26வது நாளாக தொடர்ந்து நேற்றும் தாக்குதலை நடத்தியது. மரியுபோல் நகரம் இப்போரில் மிகக்கடுமையாக உருக்குலைந்துள்ளது. இங்கு சுமார் 4 லட்சம் மக்கள் உயிர் தப்பிக்க தினம் தினம் செத்துப் பிழைக்கின்றனர். இங்குள்ள பொதுமக்கள் அடைக்கலாம் அடைந்துள்ள தியேட்டர், பள்ளி மீது ரஷ்யா குண்டுவீசி தாக்கி உள்ளது. இக்கட்டிடங்களின் அடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் போர் நிறுத்தம் சாத்தியமே இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதைவிடுத்து வெறுமன பேச்சுவார்த்தைகளை நீட்டித்துக் கொண்டே செல்வதால் எந்த பயணும் இல்லை என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் நீண்டு கொண்டே இருந்தால் 3ம் போர் வெடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். மேலும் உக்ரைனை ஏற்கிறோம் அல்லது ரஷ்யாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ கூட்டமைப்பு உடனே வெளிப்படையாக கூற வேண்டும் என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.


Tags : NATO ,Russia ,President of Ukraine , President of Russia, NATO, Ukraine, Zhelensky
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...