நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் நட்சத்திர விநாயகர் கோயிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா நடந்தது. ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் நேற்று பெயர்ச்சி அடைந்தனர். இதை முன்னிட்டு நேற்று மதியம் காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே (கூழமந்தல் ஏரிக்கரை) உள்ள ஸ்ரீ நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா நடந்தது. தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கும், அதற்குண்டான விருட்சங்களுக்கு விநாயக பெருமான் எழுந்தருளி, அத்தி விநாயகர் ஆலய விநாயகர், வன்னி விநாயகர் என 27 நட்சத்திர விருட்சங்களுக்கு விநாயகப்பெருமான் எழுந்தருளி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு நிகழ்ச்சியாக மரங்களுக்கும் பூஜை செய்யப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: