மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் உதடு அன்னப்பிளவு இலவச சிகிச்சை முகாம்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரின் பிறந்த நாளையொட்டி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவம், கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை, ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரி, மிஷன் ஸ்மைல் மருத்துவ தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் 4 நாட்களுக்கான உதடு மற்றும் அன்னப்பிளவு இலவச அறுவை சிகிச்சை முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் ரமேஷ் தலைமை தாங்கினார். மிஷன் ஸ்மைல் தொண்டு நிறுவன தலைவர் ரபியுர் ரகுமான், அறுவை சிகிச்சை நிபுணர் சக்திவேல், மருத்துவ கண்காணிப்பாளர் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் கார்த்திக் கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை பொது தணிக்கை முதன்மை கணக்காளர் அம்பலவாணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 35க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: