காங். திட்டம் முடிவெடுக்கும் குழுவில் ஜி-23 தலைவர்கள்

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி தலைவர்களான ஜி-23 தலைவர்கள் மீண்டும் கட்சி தலைமை குறித்து கேள்வி எழுப்பினர். கட்சியில் யார் முடிவு எடுக்கிறார்கள் என்பதே தங்களுக்கு தெரியவில்லை என்றும், பத்திரிகைகளில் பார்த்து தான் கட்சி மேலிட முடிவுகளை அறிந்து கொள்வதாகவும் அவர்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலிடம் புகாரளித்தனர். மேலும், கூட்டு தலைமைக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஜி-23 குழுவில் உள்ள தலைவர்கள் சிலருக்கு, கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் இடமளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த தலைவர்களில் சிலர் காங்கிரஸ் செயற்குழுவிலோ அல்லது நாடாளுமன்ற கட்சிக் குழு போன்ற புதிய அமைப்பிலோ இடம் பெறலாம் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதிருப்தி குழுவை சமாதானப்படுத்த தற்போதுள்ள முக்கிய பொறுப்பில் உள்ள சில தலைவர்கள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மாற்றப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: