முறைகேடு செய்தவர்களுக்கு நகை கடனை தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா?.: சட்டசபையில் ஈபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: முறைகேடு செய்தவர்களுக்கு நகை கடனை தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசின்  பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அதில் ஒன்றான நகை கடன் தொடர்பான விவாதம் நடைபெற்றது.

அதாவது, 5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு அரசு எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதற்க்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 சவரனுக்கு கீழ் அடகு வைத்து தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என ஆதாரம் கொடுங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  

ஆதாரம் கொடுத்தால் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அதனையடுத்து பேசிய அவர், முறைகேடு செய்தவர்களுக்கு நகை கடனை தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா? என பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி எழுப்பினார்.

Related Stories: