×

மருத்துவமனையில், ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார்: இளவரசி பரபரப்பு வாக்குமூலம்..!

சென்னை: மருத்துவமனையில், ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் என இளவரசி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணத்தில் ஓபிஎஸ் உட்பட பலரும் சந்தேகத்தை கிளப்பினர். குறிப்பாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தான் முதல்முதலில் குரல் கொடுத்தார். இதையேற்று கடந்த 2017ல் செப்டம்பர் மாதத்தில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், வீட்டில் வேலை செய்த பணியாளர்கள் உட்ப அனைவரிடமும் விசாரணை நடத்தினர். 95 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில், ஜெயலலிதா இறக்கும் போது முதல்வராக இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த ஆணையம் சார்பில் பலமுறை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஆணையத்தின் சம்மன்படி ஒரு நாள் கூட ஓபிஎஸ் நேரில் ஆஜராகவில்லை. இதனால் விசாரணையில் மந்தநிலை ஏற்பட்டது. இதற்கிடையே நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு எதிராக அப்போலோ நிர்வாகம் கடந்த 2019 ஏப்ரல் 24ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை ஆணையத்திற்கு எதிராக இடைக்கால தடைபெற்றது.

இதனால், ஆணையம் அந்த ஆண்டில் இருந்து முடங்கியது. இந்த சூழலில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. பிறகு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் முன்னிலையில் கடந்த 7ம் தேதி 5 பேரிடமும், 8ம்தேதி 4 அப்போலோ டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் அளித்த பதிலை வாக்குமூலமாக விசாரணை ஆணையம் சார்பில் பதிவும் செய்யப்பட்டது. மேலும் கடந்த 15ம் தேதி நடந்த விசாரணையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 3 முக்கிய டாக்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

 அதைதொடர்ந்து இறுதிக்கட்ட விசாரணையாக ஜெயலலிதா மரணத்தில் சந்தகம் கிளப்பிய அப்போதைய முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலிதாவுடன் 75 நாட்கள் உடன் இருந்து சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியிடம் விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்தது. அதன்படி ஓபிஎஸ் மற்றும் இளவரசிக்கும் விசாரணை ஆணையம் சார்பில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி சம்மன் அனுப்பட்டது. அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இளவரசி ஆகியோர் விசாரணைக்காக ஆஜரானர்.

அப்போது இளவரசியிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின் போது; மருத்துவமனையில், ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார்; நான் 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்று வந்தேன். ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன். கடந்த 2014 ஆம் ஆண்டு சிறைக்கு சென்றபோது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவாகவும், மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார் என பரபரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தார்.


Tags : Sasigala ,Jayalalitha , At the hospital, Sasikala was the only one who watched Jayalalithaa while she was there: Princess sensational confession ..!
× RELATED மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம் வீரப்பன்(98) காலமானார்