தமிழகத்தில் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த 48 திட்டங்கள்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. அருள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழகத்தில் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த 48 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. அருள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், சாலை விபத்துகளை குறைக்க முதன்மையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் உள்ளிட்ட 48 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். சாலை விபத்துக்களை குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா? - அருள் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியிருந்தார்.

Related Stories: