×

முல்லைப் பெரியாறு, காவேரி நதிநீர்ப் பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் குரல் கொடுக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:  கேரள காவல் துறையினரின் குடியிருப்புகளுக்குச் சென்று, உணவு அருந்தி, சற்று ஓய்வெடுத்த பின் அதே படகில் தேக்கடி திரும்பியுள்ளனர். அதே சமயத்தில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குமுளியைச் சேர்ந்த இரண்டு ஓய்வு பெற்ற கேரள காவல் துறை சார் ஆய்வாளர்கள் மீது சாதாரண வழக்கு பெயருக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல், கர்நாடக அரசின் செயல்பாடு இதைவிட மோசமாக இருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டப்படும் என்றும், தேவைப்பட்டால் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திப்போம் என்றும் கூறியிருக்கிறார் கர்நாடக முதலமைச்சர். எனவே, முல்லைப் பெரியாறு மற்றும் காவேரி நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிட ஏதுவாக, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி கேரள, கர்நாடக அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து ஒற்றுமையாக குரல் கொடுத்து தமிழ்நாட்டின் பலத்தை பறைசாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Mullaiperiyaru ,Cauvery ,O. Panneer , Political parties must speak with one voice on Mullaperiyar and Cauvery river water issues: O. Panneer
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு