×

மூப்பனாரின் நேர்முக உதவியாளர் பாஸ்கர் மறைவுக்கு கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தமிழக கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தொடக்கத்தில் தட்டச்சு இயக்குனராக பணியில்  சேர்ந்து, பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக  மூப்பனார் பொறுப்பேற்று தலைநகர் டெல்லியில் பணியாற்றியபோது அவருக்கு  நேர்முக உதவியாளராக நீண்டகாலம் பணியாற்றிய பாஸ்கர் காலமான செய்தி கேட்டு  அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கடந்த 40 ஆண்டு காலமாக காங்கிரஸ்  கட்சியினரோடு நெருக்கமான தொடர்பு கொண்டு பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியினரோடு நெருக்கமான  நட்புக்கொண்டிருந்த பாஸ்கர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பாஸ்கரை  இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்  காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக்கொள்கிறேன்.



Tags : KS Alagiri ,Bhaskar , KS Alagiri mourns the death of Bhaskar, the elder's interview assistant
× RELATED ஹீரோவாக நடிக்க பயமாக இருக்கிறது: எம்.எஸ்.பாஸ்கர்