சிம்பு படக்காட்சியை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்து காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: திருமழிசையில் பரபரப்பு

திருவள்ளூர்: நடிகர் சிம்பு படக்காட்சியை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்து காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமழிசை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமழிசை பிரயாம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் பிரகாஷ்(25). அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.  இந்நிலையில், இவர் காதலித்த பெண் இவரது காதலை ஏற்காததால் மனமுடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் தனது செல்போனில் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் வரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் காட்சியை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார்.  தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள வேப்பமரத்தில் பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஸ்திரி தொழிலாளி தற்கொலை: திருமுல்லைவாயல் ஞானஒளிபுரம்  2வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(53) இஸ்திரி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். ஆறுமுகம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் புகாரின்படி விசாரிக்கின்றனர்.

Related Stories: