×

தொளவேடு கிராமத்தில் திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர்கள் ராஜூ, செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, அபிராமி குமரவேல், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் குமரவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர்கள் சேலம் சுஜாதா, முரசொலி மூர்த்தி, சி.எச்.சேகர், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இறுதியில் ஒன்றிய மகளிரணி துணை செயலாளர் உஷா நன்றி கூறினார்.


Tags : DMK ,Tolavedu , Public meeting to explain the achievement on behalf of DMK in Tolavedu village
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்