பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா தலைமை வகித்தார். இதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை, கரலம்பாக்கம், குமாராஜிபேட்டை, பெருமாநல்லூர், சொரக்காப்பேட்டை, மேளப்பூடி,   பொம்மராஜிப்பேட்டை, கோணசமுத்திரம், ராமாபுரம், காக்களூர், ஜெங்காளப்பள்ளி, நெடுங்கல் கீச்சலம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, பொன்.சு.பாரதி, நாகராஜ், தேவராஜ், அன்பழகன், அச்சுதன், கோபி, சத்தியமூர்த்தி, குருநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சிகளில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோர் பங்கேற்று புதிய கல்வெட்டை திறந்துவைத்து கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மு‌.நாகன், திருத்தணி நகர மன்ற துணைத் தலைவர் சாமிராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.எம்.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: