×

களியனூர் அரசு நடுநிலை பள்ளியில் மேலாண்மை குழு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே களியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மேலாண்மை குழுவை கலெக்டர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முன்னேற்றத்திற்காகவும் பள்ளிகள் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்கும்  குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-பள்ளி மேலாண்மை குழு அமைக்க தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் கல்வி வட்டத்தின் கீழ் இயங்கிவரும் களியனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவினை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இதன்பின் பெற்றோர்கள் மாணவர்களிடையே பள்ளி மேலாண்மைக் குழுவினர் அதன் செயல்பாடுகள் பள்ளி மேலாண்மைக்குழுக்கள் முக்கியத்துவம் பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெற உள்ள மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வு அதன் மறு கட்டமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து எளிய முறையில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கூறி  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இவ் மேலாண்மை குழுவில் தலைவராக பள்ளியில் பயிலும் மாணவர்களின் தாயார் இருப்பார் எனவும் , துணைத் தலைவராக பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் மாணவியின் பெற்றோர் இருப்பார்கள். இக்குழுவில் ஆசிரியர்களின் பங்கு 25% இருக்கும் எனவும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சுய உதவி குழு உறுப்பினர், தன்னார்வலர்கள் என மொத்தம் 20 உறுப்பினர்கள் இதில் உள்ளனர்.

இதன் மூலம் பள்ளி கட்டமைப்பு ஆசிரியர் பணியிடங்களை நிறைவு செய்தல், நடவடிக்கை எடுத்தல் , பள்ளியின் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து இக் குழு கூடி நடவடிக்கை எடுக்கும். இப்பொழுது பள்ளி மாணவ மாணவியர்கள் கல்வி கற்க நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி,  மாவட்ட கல்வி அலுவலர்கள் , வட்ட கல்வி அலுவலர்கள் , ஊராட்சி மன்ற தலைவி வடிவுக்கரசி ஆறுமுகம்,  தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Tags : Management Committee ,Kalyanur Government Intermediate School , Management Committee at Kalyanur Government Intermediate School
× RELATED கர்நாடக மாநிலத்தின் கருத்தை...