×

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மரம் நடு விழா

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மரம் நடும் விழா நடந்தது. மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. கல்வி குழும இயக்குனர் மணி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். முதன்மை செயல் அலுவலர் டாக்டர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மதன் பெரியசாமி, பொறியியல் கல்லூரி துணை முதல்வர் ஜானகிராமன், கலை அறிவியல் கல்லூரி துணை முதல்வர் சந்தியா உள்பட பலர் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் 300 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர்.

Tags : Thalakshmi Sinivasan College , Tree planting ceremony at Thanalakshmi Srinivasan College
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி