காஞ்சிபுரத்தில் முப்பெரும் விழா

காஞ்சிபுரம்:  சான்றோர் அவை அகம், திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, விளையாட்டு போட்டிகள் பாராட்டு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா காஞ்சிபுரம் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  திருக்குறள் பேரவை தலைவர் மு.க .பாஸ்கரன் தலைமை தாங்கினார். சங்கர் சா, லட்சுமணன், சண்முகம், ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் டாக்டர் பி .எம். சங்கரன்,  சங்க செயலாளர் எஸ் விஜயகுமார், செயலாளர் சேகர், திருக்குறள் பேரவை நிறுவனர் குறள் அமிர்தன் ,தலைமையாசிரியர் பழனி, ஆசிரியர் தினகரன், ரமாதேவி பாஸ்கரன், கல்வி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ராஜி, அஜய், தீபக், பாஸ்கரன் , பிரியதர்ஷினி, ஆதித்யா, பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் குரல் பெருந்தகை விருது டாக்டர் சௌந்தரராஜன், முன்னாள் துணை ஆட்சியர் பாபு, இந்து கல்வி அறக்கட்டளை தலைவர் ஆனந்தன் உள்ளிட்டவர்களுக்கு குறள் பெருந்தகை விருது வழங்கப்பட்டது.

Related Stories: