×

கட்சி கட்டுப்பாட்டை மீறிய திமுக கிளை செயலாளர் நீக்கம்: துரைமுருகன் நடவடிக்கை

சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக கிளை செயலாளர் அதிரடியாக நீக்கி பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:  திருப்பூர் வடக்கு மாவட்டம், பல்லடம் கிழக்கு ஒன்றியம், கரைபுதூர் ஊராட்சி, சின்னக்கரை கிளைக் கழகச் செயலாளர் டி.சிவக்குமார் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி(சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pimugha ,Branch , Dismissal of DMK branch secretary for violating party control: Duraimurugan action
× RELATED பெங்களூரு போதை டான்ஸ் வழக்கு;...