×

நீர்வளத்துறை திட்டப்பணிகள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை..!

சென்னை: நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் மூன்றாம் நாளாக நடைபெற்றது. நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்தீப் சக்சேனா. இ.ஆ.ப., அவர்கள் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்து திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளித்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து, தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்துதல், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், மழை நீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள், குறிப்பாக தடுப்பணைகளை உருவாக்குதல் ஆகியவை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்.

முதல் கட்டமாக கோவை மண்டலத்திற்குட்பட்ட 6 மாவட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அடுத்து மதுரை மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து இன்று 20.03.2022 காலை திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 12 மாவட்டங்களும், சென்னை மண்டலத்திற்குட்பட்ட 10 மாவட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டன. கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டப் பணிகள், முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளப் பணிகள், அப்பணிகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள், வரும் நிதி ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை நீர் நிலைகள் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கான திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பிற துறைகளின் ஒத்துழைப்பு மற்றும் அனுமதியுடன் நிறைவேற்றப்பட்டு வரும் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், திட்டப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் உள்ளப் பிரச்சினைகள், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வரும் காலங்களில் புதிய மணல் குவாரிகளை துவக்குதல், நிரந்தர மற்றும் தற்காலிக வெள்ளத்தடுப்புப் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நபார்டு வங்கி நிடா நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்கள் ஒன்றிய அரசின் நிதியுதவி பெற தகுதியுடைய திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாய்வின் பொழுது தமிழகம் முழுவதும் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களிள் உள்ள கருவேல மரங்களை உடனடியாக அகற்றி  தண்ணீர் தங்கு தடையின்றி விரைந்து செல்லும் வகையில் அனைத்து அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு இணைச் செயலாளர்                             திருமதி மகேஸ்வரி ரவிக்குமார்.இ.ஆ.ப., அரசு சிறப்புச் செயலாளர். திரு. ட்டி. இரவிந்தர பாபு, காவிரி தொழில்நுட்ப குழுத்தலைவர் திரு.ஆர்.சுப்பிரமணியன், துணைத்தலைவர், திரு.எம்.செல்வராஜ், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் திரு. கு.இராமமூர்த்தி, மண்டல தலைமைப் பொறியாளர்கள் திரு. பொ.முத்துசாமி, திரு. மா. கிருஷ்ணன்,

திரு. ச.இராமமூர்த்தி, திரு. ஜி.முரளிதரன், நீர்வளத்துறை பல்வேறு பிரிவு தலைமைப் பொறியாளர்கள் திரு. ஜி.பொன்ராஜ், திரு. பி.இராஜேந்திரன், திரு. எ.தனபால், திரு. எஸ். பிரபாகரன், திரு. எம். இராஜமோகன், இணைத் தலைமைப் பொறியாளர் (பாசனம்) திரு. சுரேஷ் குமார், அரசு துணைச் செயலாளர்கள் திரு. மு.ரவிக்குமார், திருமதி. மு. பவானி, திரு. ந.பாரி மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Water Resources ,Minister ,Duraimurugan , Minister of Water Resources Mr. regarding water projects. Thuraimurugan consults with high officials ..!
× RELATED திமுக கூட்டணியில் இருப்பவர்கள் கையை...