×

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் துணை தலைவருக்கான வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிக நிறுத்தம்..!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் துணை தலைவருக்கான வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிகநிறுத்தப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஜூன் 23ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கம் சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. இதற்கிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது. இந்த வழக்கு 2 ஆண்டு களுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும், பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ண வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு, நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன. அதில், விஷால் அணியில் போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர். இந்த நிலையில் ஐசரி கணேஷ் தரப்பினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியுள்ளனர். தேர்தல் நாளன்று கூறிய பதிவான வாக்குகளை விட வாக்குப்பெட்டியில் 5 வாக்குச்சீட்டுகள் அதிமகாக இருப்பதாக ஐசரி கணேஷ் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனிடம் ஐசரி கணேஷ் தரப்பினர் புகார் அளித்தனர்.இந்த புகாரை தொடர்ந்து நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : South Indian Actor Association , Counting of votes for the Vice President of the South Indian Actors' Association has been suspended ..!
× RELATED மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர்...