×

உயர் வேளாண் திட்டங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு,குறு விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம்

சென்னை; வேளாண் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: ஆண்டுக்கு மூன்று முறை உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சிகள் மாவட்டந்தோறும் நடத்தப்படும். கண்காட்சியில் பங்கேற்போர் புதிய ரகங்களை உருவாக்கலாம். இதற்காக அரசு 2022-23ம் ஆண்டில் ₹1.50 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்யும்.

* உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்குத்தொகையினை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். இதற்கென 2022-23ம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். * மாறி வரும் காலநிலைகளினால் பயிர்களில் திடீரென்று பூச்சி, நோய்த் தாக்குதல்கள் ஏற்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. புதிய பூச்சிகள், நோய் ஆகியவற்றின் தாக்கம் தென்பட துவங்கியவுடனே அவற்றை எதிர்கொள்ளும் வகையில் ₹5 கோடி கொண்ட ஒரு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, பூச்சி நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Tags : Adithravidar , 20% additional subsidy for Adithravidar, tribal small and marginal farmers in higher agricultural schemes
× RELATED டிசம்பர் 28, 29-ல் ஆதிதிராவிடர் நலத்துறை...