பேரவை கூட்டத்தொடர் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நாளை (திங்கள்) முதல் புதன்கிழமை வரை பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது விவாதம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. அப்போது, சட்டப்பேரவை கூட்டத்தில் யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories: