×

தமிழக அரசின் பட்ெஜட் விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: தமிழக அரசின் பட்ெஜட்டுக்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை 2022-23 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கதக்கது. உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டிலோ அல்லது வேறு வெளிநாடுகளிலோ கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும். 21 இந்திய, உலக மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் வெளியிடப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கதக்கவையாக உள்ளது.  வெறும் அறிவிப்பு ஆட்சியாக இல்லாமல், அதனை நிறைவேற்றும் ஆட்சியாக இருந்தால் வரவேற்கதக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Government Budget ,Vijayakand , Welcome to the Budget of the Government of Tamil Nadu Vijayakanth
× RELATED அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: நாளை...