புனே சிறுமி புகாரால் அதிர்ச்சி குடும்பத்தினரால் பாலியல் கொடுமை

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பள்ளி ஒன்றில் ‘நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்’ தொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்த 11 வயது சிறுமி, தன்னை தனது தந்தை, அண்ணன் உள்ளிட்ட குடும்பத்தினர் 5 ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்வதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பீகாரை சேர்ந்த அந்த சிறுமியை 2017ம் ஆண்டிலிருந்து அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2020ல் சிறுமியின் அண்ணனும், அதைத் தொடர்ந்து அவளது தாத்தா, தூரத்து மாமா அவளை தகாத முறையில் தொடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சிறுமிக்கு தனக்கு நிகழ்வது என்னவென்று தெரியாததால் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை. பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை, அண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது. இதுவரை யாரையும் கைதாகவில்லை.

Related Stories: