×

பங்குனி உத்திர திருவிழா நெல்லையப்பர் கோயிலில் செங்கோல் வழங்கும் வைபவம்

நெல்லை:  நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் செயல்அலுவலருக்கு செங்கோல் வழங்கும் வைபவம் நடந்தது.நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் 10வது நாளான நேற்று நெல்லையப்பர் தோன்றிய வரலாற்று நிகழ்வுகள் நடந்தது. பங்குனி உத்திரத்தின் போது கர்ப்பக்கிரகத்தில் ஆத்மார்த்த பூஜையில் இருந்த உடையவர் லிங்கம், உற்சவர் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

பங்குனி உத்திர திருவிழாவான நேற்று காலையில் சந்திரசேகர், பவானி அம்பாள் தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து அஸ்திரதேவர், அஸ்திரதேவி தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது. மாலையில் அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், பாண்டியராஜா சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கும்ப பூஜை நடந்தது.கோயில் நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டி, கோயில் செயல் அலுவலரான (பொ) சுந்தரேசனுக்கு செங்கோல் வழங்கும் வைபவம் நடந்தது. இதனையடுத்து சுவாமி, அம்பாளுக்கு சோடச உபச்சார தீபாராதனைகளும். வேதமந்திரங்கள், பஞ்சபூராணம் பாடப்பட்டு, பஞ்சமுக தீபாராதனைகளும் நடந்தது. சுவாமியின் திருப்பாதம் சுவாமியிடமே வைக்கப்பட்டது.

Tags : Panguni Uthara Festival ,Sengol ,Nelaiapar Temple , Panguni Uttar Festival At Nellaiyappar Temple The scepter-giving ceremony
× RELATED மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து...