×

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ரூ.300 டிக்கெட் 21 முதல் ஆன்லைனில் வெளியீடு: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ₹300 தரிசன டிக்கெட் 21, 22, 23ம் தேதிகளில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான டிக்கெட்கள் வருகிற 21ம் தேதி(நாளை மறுதினம்) முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. இதில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்   21ம் தேதியும், மே மாதத்திற்கான டிக்கெட்  22ம் தேதியும், ஜூன் மாத டிக்கெட் மார்ச் 23ம் தேதியும் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் திங்கள் முதல் புதன் வரை ஒரு நாளைக்கு 30,000 டிக்கெட்டுகளும் வியாழன் முதல் ஞாயிறு வரை ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.


Tags : Rs 300 tickets for April, May and June online release from 21st: Tirupati Devasthanam Announcement
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 29...