×

பெரியாறு அணைக்கு சென்ற 4 பேர் மீது வனத்துறை வழக்கு

கூடலூர்: கேரள ஓய்வு போலீஸ் அதிகாரிகள் அப்துல்சலாம், ஹக்கீம்,   டெல்லி போலீஸ் அதிகாரி ஜான்சன், அவரது மகன் வர்கீஸ் ஆகியோர் கடந்த 13ம் தேதி  தேக்கடியிலிருந்து தமிழக பொதுப்பணித்துறை படகில் அனுமதியின்றி பெரியாறு அணைக்கு சென்று மாலையில் திரும்பினர். இதுகுறித்து அணையில் உள்ள கேரள போலீசாரின் வருகைப் பதிவேட்டில் தகவல் இல்லை. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, பெரியாறு அணை காவல்நிலைய போலீசார் அனுமதியின்றி அணைக்கு சென்ற 4 பேர் மீது, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், அணைப்பகுதி கேரள போலீசார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நேற்று தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலய இணை இயக்குனர் உத்தரவின்பேரில், தேக்கடி வனத்துறை ரேஞ்சர் அகில் மற்றும் அனுமதியின்றி அணைக்கு சென்ற 4 பேர் மீது, வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Forestry Department ,Periyari Dam , Forest Department case against 4 persons who went to Periyar Dam
× RELATED இரவு வான் பூங்கா, முதலைகள் பாதுகாப்பு...