கள்ளக்காதலியை கணவன் அழைத்ததால் ரயில் முன் பாய்ந்து உயிர்விட்ட வாலிபர்: ஜோலார்பேட்டையில் பரபரப்பு

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரயிலில் அடிபட்டு வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார் பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ரயிலில் அடிபட்டு இறந்தவர் திருப்பத்தூர் அருகே உள்ள அப்பாய் தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சுகவனம்(25) என்பதும், இவர் தேங்காய் உரிக்கும் கூலித் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் இவர் குடும்ப தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பனின் மனைவி, கணவனுடன் சண்டை போட்டு விட்டு, வாழப்பிடிக்காமல் தனது தாய்வீட்டில் தங்கியுள்ளார். அப்போது, அவரது நண்பனின் மனைவிக்கும், சுகவனத்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடையில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் ஜோலார்பேட்டையிலேயே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணின் கணவன், தனது மனைவியை வீட்டிற்கு வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கள்ளக்காதலி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாரோ? என்று மனமுடைந்து, சுகவனம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் ெதரியவந்துள்ளது.

Related Stories: