×

கொடுங்கையூரில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள குப்பைகள் பயோ மைனிங் முறையில் அகற்றப்படும்: சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

கொடுங்கையூரில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள குப்பையை பிரித்து அகற்றும் பணிகள் (Bio-mining) முறையில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். அம்ருத் 2.0 திட்டத்திற்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பு சுமார் ரூ.13 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு ஆகியவற்றின் பங்களிப்பின் வாயிலாக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை திட்டங்களை அரசு செயல்படுத்தும்.

இம்மதிப்பீடுகளில் அம்ருத் திட்டத்திற்கு ரூ.2,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்கு ரூ.1,875 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.20,400.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நகர்ப்புற பகுதிகளை பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.

அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று, புதிய மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி ரூபாயும், சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Tags : Kodungaiyur ,Singara Chennai , Kodungaiyur, Garbage, Bio Mining,
× RELATED கேடுகளுக்கு வழிவகுக்கும்...