×

முன்னாள் எம்பி தேவதாஸ் காங்கிரசில் இருந்து விலகல்

சேலம்: சேலம் முன்னாள் எம்பி தேவதாஸ், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்தார். சேலம் முன்னாள் காங்கிரஸ் எம்பி.தேவதாஸ், சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எனது தந்தை ராமசாமி உடையார் 60ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியை வளர்த்தார். நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருக்கிறேன். சேலம் தொகுதியின் த.மா.கா. எம்பியாக பணியாற்றியுள்ளேன். ஆனால் காங்கிரஸ் கட்சியில் எனக்கு மதிப்பு, மரியாதை இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கமிட்டி உறுப்பினராக கூட என்னை நியமிக்கவில்லை. காங்கிரசில் யார், யாருக்கோ பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் காமராஜரோடு இருந்து, கட்சியை வளர்த்த ராமசாமி உடையார் மகனான எனக்கு ஒரு பொறுப்பும் ெகாடுக்கவில்லை.

நான் எந்த கோஷ்டியிலும் இல்லை என்பதால் பொறுப்பு வழங்கவில்லையா?. எனவே, நான் வகித்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்  இருந்து விலகுகிறேன். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மாநில தலைவர் அழகிரி ஆகியோருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன். பாஜகவில் சேரமாட்டேன். தற்போது வெளிநாடு செல்கிறேன். திரும்பி வந்ததும் அடுத்த கட்ட முடிவுகளை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : MB Devadas ,Congress , Former MP Devdas resigns from Congress
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...