×

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் செயல்முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

கீவ்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் செயல்முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான உக்ரைன் விண்ணப்பம் தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் கருத்து சில மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 23வது நாளாக நீடிக்கும் நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயனிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று பேசினார்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் கூறுகையில், வரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது தொடர்பான செயல்முறையில் முன்னேற்றம் ஏற்படும் என உக்ரைன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான உக்ரைன் விண்ணப்பம் தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் கருத்து சில மாதங்களுக்குள் தயாரிக்கப்படும். உக்ரைன் அரசு மற்றும் ஐரோப்பிய ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்களின் இலக்கை அடைவதற்கான முயற்சியை இணைந்து முன்னெடுத்து செல்வோம்’ என ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.

Tags : EU ,Ukraine ,Chancellor ,Zelansky , Progress has been made in the process of joining the EU; Information from the President of Ukraine Zhelensky
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...