கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பிய நபரே பணத்தை திருடியது விசாரணையில் அம்பலம்.!

கடலூர்: கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே பணத்தை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் அடுத்த கே.என் பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் நேற்று காலை வைக்கப்பட்ட நிலையில் இரவு பணம் திருடு போய் இருப்பதாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஏ.டி.எம் மையத்திற்கு பணத்தை நிரப்புவதற்காக பணத்தைக் கொண்டு சென்ற நான்கு நபர்களிடம் விசாரித்த போது கிருஷ்ணகுமார் என்பவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் நேற்று மாலை சக ஊழியருடன் ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்றதாகவும் அந்த ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமரா எதுவும் இல்லாத இருந்தும் இரவு நேரத்தில் அந்த ஏடிஎம் மையத்திற்கு சென்று பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரிடம் மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏடிஎம் மையத்தில் இருந்து 9 லட்சம் பணம் களவு போய் இருப்பதாக  மேற்பார்வையாளர் ராஜா என்பவர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதில் கிருஷ்ணகுமார் நெல்லிக்குப்பத்தில் அடுத்த விஸ்வநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பணத்தை திருடியது ஒப்புக்கொண்டு மேலும் அவரிடம் இருந்து ஆறு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது மீதமுள்ள பணத்தை அவர் என்ன செய்தார் என்பதை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: