தஞ்சையில் காவலர்களின் மெத்தனம்; கைவிலங்குடன் தப்பிய கைதி: 6 பேரை பணியிடை நீக்கம் செய்து ஐ.ஜி அதிரடி உத்தரவு

தஞ்சை: தஞ்சை செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடியில் கைவிலங்குடன் கைதி தப்பிய சம்பவத்தில் 4 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எஸ்.எஸ்.ஐ. கலியமூர்த்தி, காவலர்கள் மணிகண்டன், விஜயகுமார், ஜகலதலப்பிரதாபன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சாராயம் கடத்திய ஹரிஹரன் என்பவர் இறந்த சம்பவத்தில் எஸ்.எஸ்.தனசேகரன், காவலர் பார்த்திபன் ஆகியோரை இடைநீக்கம் செய்து ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.      

Related Stories: