பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...ரூ.1.01 கோடி யாருக்கு சொந்தம்?

சென்னை: பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. முன்னதாக யூ-டியூப் சேனல்கள் மூலமாக ஆன்லைன் விளையாட்டுகளில் பெண்களை ஆபாசமாக பேசியதாக மதன் என்ற யூ-டியூபர் மீது புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடைப்படையில் மதன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனையடுத்து பப்ஜி மதனுக்கு உறுதுணையாக இருந்த அவரின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இவர்கள் பயன்படுத்திய வங்கிக்கணக்கும் முடக்கப்பட்டது.

முடக்கப்பட்ட வங்கிக்கணக்கை விடுவிக்க கோரி கிருத்திகா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, வங்கிக்கணக்கை நீண்ட காலத்துக்கு முடக்குவது சட்டப்பூர்வ உரிமையை பாதிக்கிறது என மனுதாரர் ஐகோர்ட்டில்  தெரிவித்தார். அதற்க்கு கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.1.01 கோடி யாருக்கு சொந்தமானது என்பது விசாரணைக்கு பின் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட் நீதிபதிகள், வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து புலன் விசாரணை அதிகாரி முன்கூட்டி நோட்டீஸ் அனுப்பினால், அது ஆதாரங்களை அழிக்க வழி வகுத்து விடும். எனவே சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: