×

அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் முடிவுக்கு சென்னை ஐ.ஐ.டி. வரவேற்பு..!!

சென்னை: அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனசென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி வரவேற்பு தெரிவித்திருக்கிறார். அரசு பள்ளிகள் மற்றும் அரசுடன் இணைந்து இந்த திட்டம் பல மாணவர்களை எட்ட முயற்சிகள் எடுப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அதில், ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்களின் முழு செலவை அரசே ஏற்கும் என உறுதியளித்தார்.

Tags : Chennai ,IIT ,IITs , Government School, IIT, Expenditure on Education, Chennai IIT
× RELATED வங்காள விரிகுடா, பெருங்கடல்கள்...