×

பங்குனி உத்திரப் பெருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மயில்காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில்,இன்று நடந்த பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மயில்காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து மூலவரை வழிபட்டனர்.திருத்தணி முருகன் கோவிலில், இன்று பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

பகல் 12:00 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி உத்திரம் என்பதாலும், மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.பொதுவழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags : Panguni Uthapa Festival ,Murugan Temple ,Editani Murugan , Panguni Uttara Peruvija, Thiruthani Murugan Temple, Balkudam
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து