×

துயர் நிறைந்த சூழலில் துணிவான செயல்பாடு!

நன்றி குங்குமம் தோழி

சில மாதங்களாக கொரோனா என்ற பீதி மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. இதனால் உலகம் முழுதும் மக்கள் பயத்துடன் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, அன்றாட கூலி வேலையில் ஈடுபடுபவர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பலரும் நிதிப் பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அன்றாட கூலி வேலை செய்பவர்களின் நிலை பாழும் கிணற்றில் தள்ளப்பட்ட கதையாக உள்ளது. இவர்களின் நிலை அறிந்து பல தொண்டு நிறுவனங்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள். அதன் வரிசையில் பாரத ஸ்டேட் வங்கியும் கைகோர்த்துள்ளது. இவர்கள் சென்னை மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுதும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

உற்ற நண்பன்

*உணவுப் பொருள் நிவாரணம்: ரூ.20.46 லட்சம் செலவில் உணவு தானியங்கள், மளிகைப் பொருட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் 5523 பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

*PPE பாதுகாப்பு உடைகள்: ரூ.45 லட்சம் திட்டச் செலவில் 5000 மருத்துவ PPE கிட்ஸ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

*COVID-19 நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு நேரடி நன்கொடையாக ரூ.45 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.

*மொத்தம் ரூ.43 லட்சம் ரூபாய் திட்டச் செலவில் மருத்துவ சாதனங்கள் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

துயருற்ற நேரத்தில் துணையாக நிற்கும் வங்கி

*பிரதமர் கிசான் சம்மான் யோஜனா/கரீப் கல்யாண் யோஜனா திட்டங்களின் கீழ் 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் 10.90 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜன்தன் கணக்குகளில் பணம் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் மொத்தம் 55 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

*சுமார் 2200 வாடிக்கையாளர் ேசவை மையப்பணியாளர் மூலம், முக்கியமாக தொலைதூர பகுதிகளில் உள்ள மேற்படி பயனாளிகளுக்கு அவர்களது இல்லத்திற்கே சென்று ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது.

*மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதியில் பணம் விநியோகிப்பதற்கு வசதியாக 19 நடமாடும் ATM-கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனாவால் மக்கள் தங்கள் தெருக்களிலிருந்து வெளிவர அனுமதியில்லாத தடை செய்யப்பட்ட பகுதிகளில் முக்கியமாக அவை இயங்கி வருகின்றன.

சேவைகளே புனிதமானது

*வங்கிப் பணிகள், அத்தியாவசிய சேவைகள் பிரிவில் வருவதால், ஊரடங்கு காலத்தில் மிகக் கடினமான சூழ்நிலையை சந்தித்த
போதும், வங்கியின் 1323 கிளைகளும் இயங்கி வந்தது.

*தனிநபர் இடைவெளி, வங்கி வளாகத்தின் மீது முறையாக கிருமி நாசினி தெளித்தல், முகக்கவசம், கையுறை அணிதல், கைகளுக்கு சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே வங்கிக் கிளைகள் செயல்பட்டன.

*PM Care நிதிக்கு, மொத்தம் 2.5 லட்சம் பணியாளர்கள் தங்களது 2 நாள் ஊதியமான ரூ.100 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர்.

*இது தவிர COVID-19 நிவாரண செயல்பாடுகளுக்காக, 2019-2020 நிதி ஆண்டின் லாபத்தில் 0.25% ஒதுக்கீடு செய்ய SBI உத்தேசித்துள்ளது.

தொகுப்பு: ஜனனி

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!