டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டு மாற்றிய 2 வாலிபர்கள் கைது

ஆலந்தூர்: கிண்டி மடுவின்கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று 200 ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆஜாஸ் (21), அமீருதீன் (26) ஆகியோரை போலீசார்  கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து  ₹18,400 மற்றும் ₹500 கள்ள நோட்டு, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு கள்ள நோட்டுகளை சப்ளை செய்த மேடவாக்கத்தை சேர்ந்த ஷாகீம் ஷா என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories: