×

இளையராஜா இசை கச்சேரியை முன்னிட்டு தீவுத்திடல் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு

சென்னை: தீவுத்திடலில் நடைபெறும் இளையராஜாவின் இசை கச்சேரியை முன்னிட்டு இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது: சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. இதில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை முத்துசாமி பாலம், மன்றோ சிலை வழியாக அண்ணாசாலைக்கு செல்பவர்கள் மற்றும் காமராஜர் சாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக அண்ணாசாலை மற்றும் ஈவெரா சாலை செல்பவர்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

* காமராஜர் சாலையில் இருந்து அண்ணா சாலை மற்றும் ஈவெரா சாலை செல்பவர்கள், உழைப்பாளர் சிலை சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி வாலாஜா சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை வழியாக ஈவெரா சாலையை அடையலாம்.
* ராஜாஜி சாலை, பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், ஆர்பிஐ சுரங்கப்பாதை வழியாக செல்லாமல், வடக்கு கோட்டை பக்க சாலை, முத்துசாமி சாலை, ஈவெரா சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
* ஈவெரா சாலையில் இருந்து போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், முத்துசாமி சாலைக்கு செல்லாமல், சென்னை மருத்துவக்கல்லூரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
* அண்ணாசாலையில் இருந்து முத்துசாமி பாலம் வழியாக ராஜாஜி சாலை செல்பவர்கள் பல்லவன் சாலை, ஈவெரா சாலை, முத்துசாமி சாலை வழியாக ராஜாஜி சாலையை அடையலாம்.
முக்கிய பிரமுகர்கள் வாகனம் நிறுத்துமிடம்:
* காமராஜர் சாலையில் இருந்து வருபவர்கள் நேப்பியர் பாலம், தீவுத்திடல் கேட்-1 வழியாக வந்தடையலாம்.
* சென்ட்ரல் மற்றும் எழும்பூர் பகுதியிலிருந்து வருபவர்கள் பல்லவன் சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், தீவுத்திடல் கேட்-1 வழியாக வந்தடையலாம்.
* அண்ணா சாலையில் இருந்து வருபவர்கள் சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், தீவுத்திடல் கேட் -1 வழியாக வந்தடையலாம்.
* ராயபுரம் பகுதியிலிருந்து வருபவர்கள் ராஜாஜி சாலை, ஆர்பிஐ சுரங்கப்பாதை, போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், வலது “யூ” வளைவு எடுத்து தீவுத்திடல் கேட்-1 வழியாக வந்தடையலாம்.
 பிளாட்டினம் ஷெக்டர் பிரிவுக்கு வரும் நபர்கள் வாகனம் நிறுத்துமிடம்:
* காமராஜர் சாலையில் இருந்து வருபவர்கள், நேப்பியர் பாலம், போர் நினைவுச்சின்னம், கொடிமர சாலை, தீவுத்திடல் கேட்-8 வழியாக வந்தடையலாம்.
* ராயபுரத்தில் இருந்து வருபவர்கள் ராஜாஜி சாலை, பாரீஸ் கார்னர், ஆர்பிஐ சுரங்கப்பாதை, போர் நினைவு சின்னம், கொடிமர சாலை, தீவுத்திடல் கேட்-8 வழியாக வந்தடையலாம்.
* அண்ணா சாலை, எழும்பூர் சென்ட்ரல் பகுதியிலிருந்து வருபவர்கள், சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம், கொடிமர சாலை, தீவுத்திடல் கேட்-8 வழியாக வந்தடையலாம்.
 கோல்டன், சில்வர், பிராஸ் ஷெக்டர், பொதுப்பிரிவுக்கு வரும் நபர்கள் வாகனம் நிறுத்துமிடம்:
* ராயபுரத்திலிருந்து வருபவர்கள் ராஜாஜி சாலை, பாரிமுனை, வடக்கு கோட்டை சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, அண்ணா சாலையில், தீவுத்திடல் கேட்-9 வழியாக வந்தடையலாம்.
* ஈவேரா சாலையில் இருந்து வருபவர்கள், சென்ட்ரல் ரயில் நிலையம், முத்துசாமி பாலம், வாலஜா சந்திப்பு, அண்ணா சாலை, தீவுத்திடல் கேட்-9 வழியாக வந்தடையலாம்.
* அண்ணா சாலையில் இருந்து வருபவர்கள் பெரியார் சிலை, மன்றோ சிலை, வாலாஜா சந்திப்பு வந்து வலது “யூ” டர்ன் செய்து தீவுத்திடல் கேட்-9 வழியாக வந்தடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Islanders ,Ilayaraja Music Concert , Traffic change in the island area today ahead of the Ilayaraja concert: Police announcement
× RELATED மேற்கிந்திய தீவு வீரர் ஒடைன் ஸ்மித்தை,...