மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் ஜெரால்டு கிஷோர் ராஜினமா ஏற்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக ஜெரால்டு கிஷோர் நியமிக்கப்பட்டார். அவர் 2022 ஜனவரி 12ம் தேதி அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரிய உறுப்பினர் ஜெரால்டு கிஷோர், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

அரசு கவனமாக ஆய்வு செய்த பிறகு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னையின் உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ெஜரால்டு கிஷோரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு அதன்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: