×

டெல்டா மாவட்டங்களில் கர்நாடகாவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: அணை கட்டுவதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதாக புகார்

தஞ்சை: மேகதாதுவில் அணை கட்ட ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மேகதாது அணை கட்ட 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள கர்நாடக மாநிலம் பாஜக அரசுக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். கர்நாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கையை  தடுத்து நிறுத்தாமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்.

கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழ்நாட்டிற்கான உபரி நீரை தடுக்கவே அணைகட்ட தீவிரம் காட்டுவதாக விவசாயிகள் புகார் கூறினர். இதேபோல் கும்பகோணத்திலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கர்நாடக அரசாய் கண்டித்து முழக்கம் எழுப்பிய அவர்கள் அணைக்கட்டும் முயற்சியை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.     


Tags : Karnataka ,Delta districts , Delta, Karnataka, Farmers, Struggle, Dam, Union Government
× RELATED கர்நாடகா கோயிலில் தீப்பந்தங்களை வீசி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்